கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2018 2:45 AM IST (Updated: 13 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணி கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் வேலை வழங்க கோரியும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைதிட்டம் செயல்படுத்தப்படாமல் அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளார்கள். மனு கொடுக்க ஏற்பாடு செய்தாலும் அதனை ஊராட்சி செயலாளர் தடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முழக்கமிட்டனர். பொருளாளர் பூங்கோதை, மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story