ரஜினிகாந்த், கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைக்கு குரல்கொடுக்காமல் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் - சாத்தூர் ராமச்சந்திரன்
மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் முதல்-அமைச்சர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுகிறார்கள் என சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ராஜபாளையம்,
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் கடந்த 28-ந் தேதி முதல் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்டவை விளையாடும் 250 அணிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளுக்கான பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. உபகரணங்களை எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்க பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:- திராவிட கட்சிகள் தோன்றுவதற்கு முன்பாக ஒதுக்கி வைக்கப்பட்டு தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களை மீட்டவர் பெரியார். தற்போது அனைவரும் படித்து, நல்ல உடையணிந்து, இருக்கையில் அமர்வதற்கு அண்ணா, கருணாநிதி போன்றோரே காரணமாகும்.
அரசியலுக்கு வருவோம் என தற்போது கூறிக் கொள்ளும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இது வரை மக்களின் பிரச்சினையில் தலையிடவில்லை. எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காமல் முதல்-அமைச்சர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தனுஷ்கோடி, மாவட்ட துணைச் செயலாளர் ராசா அருண்மொழி, நகரச் செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story