பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வினியோகம் வழக்கு 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வினியோகம் வழக்கு 19-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2018 3:45 AM IST (Updated: 13 Feb 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. வழக்கு 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் வெங்கமேட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் மாவோயிஸ்டுகள் சந்திரா, கலா ஆகிய 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் பெண் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக மதுரையை சேர்ந்த வக்கீல் முருகன் கைது செய்யப்பட்டார். சந்திரா, கலா ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், முருகன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் மீதான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 3 பேர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சந்திரா, கலா, வக்கீல் முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் திருச்சியில் இருந்து கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் 3 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலை 3 பேரும் கேட்டிருந்தனர். இதையடுத்து 3 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. மேலும் வழக்கு வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் வேனில் திருச்சிக்கு போலீசார் அழைத்து சென்றனர். 

Next Story