கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்; ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
சிவகங்கை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல ஆயத்த கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். விருதுநகர் ஒருங்கிணைப்பாளர்கள் வைரமுத்து, முத்துராஜ், ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவருமான சுரேஷ், உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் கனகராஜ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மூத்தோர் அணிச் செயலாளர் இருதயராஜ், இடைநிலைஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர், உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் சேதுசெல்வம், ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 8-வது ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story