மானிய விலையில் ஸ்கூட்டர் பெற 8,855 பேர் விண்ணப்பித்து உள்ளனர் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற 8 ஆயிரத்து 855 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நிருபர்களிடம்பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 534 பேருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்து 855 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து 4 ஆயிரத்து 288 பேரும், நகர்ப்புறங்களில் இருந்து 4 ஆயிரத்து 567 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்டம் முழுவதும் விடுதிகளில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும். பயிர் காப்பீடு தொகை வருகிற 15-ந்தேதி வரை செலுத்தலாம்.
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story