தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மதரசா சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட கவுரவத்தலைவர் தங்கவேல் பொதுக்குழுவை தொடங்கி வைத்து தீர்மானங்களை வாசித்தார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்வர்பாஷா உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்க்கும் தினக்கூலி பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக உயர்த்த வேண்டும்.
குரும்பலூர், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வேலைப்பளு மிக அதிகமாக உள்ளதால், இந்த 2 பேரூராட்சிகளிலும் தலா 10 துப்புரவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். சுகாதாரப்பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கையுறை, காலணி, முகத்திரை (மாஸ்க்), சோப், மழை கோட்டு ஆகியவற்றை வழங்கவேண்டும். பேரூராட்சி மின்பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த ஊதியமும், தினக்கூலி பணியாளர்களுக்கு உத்திரவாத பணிபாதுகாப்பும் வழங்கவேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு பணிசெய்யும் நாட்களில் ஊதிய பிடித்தம் செய்யாமல் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story