திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு மானியவிலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்காக கடந்த மாதம் 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
9 ஆயிரத்து 368 பேர்
திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்காக 9 ஆயிரத்து 368 பேர் விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story