தாயை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து காவலாளி கைது
தாயை கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
பெரம்பூரை அடுத்த வீனஸ் தீட்டித்தோட்டம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
அதே வணிக வளாகத்தில் வேலை செய்யும் பெரம்பூர் செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்த யமுனா என்ற பெண்ணை ரவி கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, யமுனா தனது மகன் பாலாவிடம்(21) கூறினார். இதையடுத்து பாலா நேற்று முன்தினம் இரவு வீனஸ் மார்க்கெட்டில் ரவியை சந்தித்து, ‘எனது தாயை ஏன் கேலி செய்தாய்?’ என நியாயம் கேட்டு உள்ளார்.
சிறையில் அடைப்பு
இதில் இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாவின் வயிற்றில் குத்தினார்.
இதில் பாலா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், காவலாளி ரவி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story