தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பாக திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பாக நேற்றுகாலை திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் செயலாளர் கோபால், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி, செயலாளர் குமார், உழவர் உழைப்பாளர் கட்சியின் இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கம்பியின் வழித்தடங்களில் உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story