தாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை


தாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2018 5:29 AM IST (Updated: 13 Feb 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

தாதரில், 23-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மும்பை தாதர் பிரபாதேவியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த பெண் கேத்கி கவன்டே(வயது28). உளவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், கேத்கி கவன்டே மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், நேற்று மாலை 6.20 மணியளவில் தான் வசித்து வரும் கட்டிடத்தின் 23-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துவிட்டார்.

இதில், படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேத்கி கவன்டே என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story