பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா
பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடைபெற்றது.
விழுப்புரம்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடைபெற்றது.
இதையொட்டி காலை 9 மணிக்கு மழைவளம் செழிக்கவும், இயற்கை சீற்றம் தனியவும், மனிதநேயம் சிறக்கவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. இதற்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, தணிக்கைக்குழு உறுப்பினர் மணிவாசகம், இளைஞரணி நிர்வாகி சண்முகம், மாவட்ட செயலாளர் பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி கலந்துகொண்டு கலசவிளக்கு வேள்வி பூஜை மற்றும் ஆன்மிக ஜோதியை ஏற்றி ஜோதி உலாவை தொடங்கி வைத்தார். இந்த வேள்வி பூஜையை மாவட்ட வேள்விக்குழு தலைவி திரிபுரசுந்தரி தலைமையில் வேள்விக்குழு தொண்டர்கள் நடத்தி வைத்தனர்.
விழாவில் மூத்த வக்கீல் சுப்பிரமணியம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க வட்ட தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, மோகனகிருஷ்ணன், சுந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்பட ஒன்றிய பொறுப்பாளர்கள், வழிபாட்டு மன்ற செவ்வாடை பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டை சக்திபீட பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, சீத்தாராமன், சண்முகம் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story