புதிய விதிகளை நிறுத்தி வைக்கும் அகில இந்திய பார் கவுன்சில் முடிவுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


புதிய விதிகளை நிறுத்தி வைக்கும் அகில இந்திய பார் கவுன்சில் முடிவுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:00 AM IST (Updated: 14 Feb 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 28–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 10 ஆண்டுகள் வக்கீல் தொழிலில் இருக்க வேண்டும். இருமுறை பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது. அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது உள்ளிட்ட 9 புதிய விதிகளை உருவாக்கி தற்போது பார் கவுன்சிலை நிர்வகித்து வரும் சிறப்புக்குழு உத்தரவிட்டது.  

இந்த புதிய விதிகளை ஒப்புதலுக்காக அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய விதிகளை நிறுத்தி வைப்பதாக அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. அதனால், நடைபெற உள்ள பார் கவுன்சில் தேர்தலுக்கு, இந்த விதிகள் பொருந்தாது என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர், புதிய விதிகளை நிறுத்திவைத்து அகில இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், இந்த இடைக்கால தடை, வருகிற 18–ந்தேதி நடைபெறும் இந்திய பார் கவுன்சில் கூட்டத்தில் புதிய விதிகள் குறித்து பரிசீலிப்பதற்கு தடையாக இருக்காது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story