தனியார் கம்பெனியில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம், 13 பேர் கைது


தனியார் கம்பெனியில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டம், 13 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கம்பெனியில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த கோரி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே வடமங்கலத்தில் தனியார் சோப்பு கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் சரக்குகள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இதில் புதுச்சேரியை சேர்ந்த 4 லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரிகளுக் கான போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தனியார் கம்பெனி போக்குவரத்து வாடகை கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு 3 சங்கத்தினர் ஒப்புக்கொண்டனர். ஒரு சங்கத்தினர் ஏற்கவில்லை. அவர்கள் மேலும் வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மற்ற 3 சங்கங்களை சேர்ந்தவர்கள் நேற்று காலை கம்பெனியில் இருந்து லாரிகளில் சரக்கு ஏற்றிக்கொண்டு வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இந்த லாரிகளை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கம்பெனி வாயிலிலேயே மறித்தனர். இதனால் லாரி ஓட்டுனர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், கதிரேசன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். இதையடுத்து லாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றன. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story