புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும்; அ.தி.மு.க. வலியுறுத்தல்


புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும்; அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடுவது குறித்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காசிலிங்கம், வெங்கடசாமி, முன்னாள் எம்.பி. ராமதாஸ், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராமலிங்கம், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*இரட்டை இலையை மீட்டு கழகத்தை சுத்தப்படுத்தும் பணியில் பல்வேறு களையெடுப்புகளை செய்து வரும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது.

*ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிப்பது.

*ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்ததற்கு வாழ்த்து தெரிவித்த விஜயதாரணி எம்.எல்.ஏ.வை கண்டித்த காங்கிரஸ் தலைவரை கண்டித்து விஜயதாரணிக்கு நன்றி தெரிவிப்பது.

*தமிழகத்தில் 6 முறை முதல்-அமைச்சராக இருந்து இந்தியாவிற்கு பல்வேறு முன்னோடியான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதாவின் உருவ சிலையை புதுவையின் மையப்பகுதியில் அரசு சார்பில் புதுவை அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story