திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக சேலம் வரை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் நாளை ஆய்வு
திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக சேலம் வரை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் நாளை (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறார்.
கரூர்,
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷெர்தா நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு திண்டுக்கல்லில் ஆய்வு மேற்கொள்கிறார். ரெயில் நிலையத்தில் ஆய்வு நடத்திய பின் சிறப்பு ரெயில் மூலம் வருகிற வழியில் ரெயில் நிலையங்களை பார்வையிடுகிறார். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கரூர் வரை அகல ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு வருவதை அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
கரூர் ரெயில் நிலையத்திற்கு நாளை பகல் 12 மணி அளவில் வந்தடைகிறார். ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? எனவும், கூடுதல் வசதிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ரெயில்வே குடியிருப்பு பகுதியை பார்வையிடுகிறார். புதிய கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொள்கிறார். அதன்பின் சிறப்பு ரெயிலில் சேலம் புறப்பட்டு செல்கிறார். செல்லும் வழியில் ரெயில் பாதை மின் மயமாக்கப்படுவதையும், ரெயில் நிலையங்களையும், ரெயில் பாதையையும் ஆய்வு செய்கிறார். சேலத்தில் புதிய திட்டங்களை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கிவைக்கிறார்.
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் நாளை கரூர் வருவதையொட்டி ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகத்தில் தமிழர்களின் பெருமைகளை குறிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போலவும், சிறுவர்கள் கூடி விளையாடுவது போலவும், சேவல்கள் சண்டையிடுவது போலவும் உள்ளிட்ட பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் காத்திருக்கும் அறையில் வர்ணம் பூசப்பட்டு இயற்கை சார்ந்த ஓவியங்களும், தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து பல ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. பொதுமேலாளர் ஆய்வுக்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story