தாயின் இறுதி சடங்குக்கு பணமின்றி தவிப்பு: பெற்றோரை இழந்த 3 சிறுவர்களும் ஒரே காப்பகத்தில் சேர்ப்பு
பெற்றோரை இழந்த 3 சிறுவர்களும், ஒரே காப்பகத்தில் தங்கி இருந்து படிக்க குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திண்டுக்கல்,
எரியோடு அருகேயுள்ள பூத்தாம்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு மோகன்ராஜ், வேல்முருகன் ஆகிய மகன்களும், காளஸ்வரி எனும் மகளும் உள்ளனர். காளியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விஜயா கூலி வேலை செய்து 3 பேரையும் படிக்க வைத்தார்.
இதற்கிடையே விஜயா புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மோகன்ராஜ் 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றான். மற்ற 2 பேரும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் புற்றுநோயால் விஜயா இறந்து விட்டார். தாய், தந்தையை இழந்த 3 பேரும் தவித்தனர். விஜயாவின் இறுதிச்சடங்கு செலவுக்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து 3 பேருக்கும் பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.
தற்போது வேல்முருகன் 8-ம் வகுப்பும், காளஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதற்காக காளஸ்வரி அரசு காப்பகத்தில் தங்கி இருந்தார். அவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது பெற்றெடுத்த தாய்க்காக வேலைக்கு சென்ற மோகன்ராஜ் மீண்டும் படிக்க விருப்பம் தெரிவித்தான்.
எனவே, அவனை பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க குழந்தைகள் நல அலுவலர்கள் முடிவு செய்தனர். அதேநேரம் காளஸ்வரி ஏற்கனவே அரசு காப்பகத்தில் இருப்பதால், 3 பேரும் தனித்தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே தாய், தந்தையை இழந்து விட்ட நிலையில் 3 பேரும் தனித்தனியாக இருந்தால் அன்புக்காக ஏங்கி தவிக்கும் நிலை ஏற்படும் என அதிகாரிகள் கருதினர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story