தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல், போக்குவரத்து பாதிப்பு
தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
ஆத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர், திண்டுக் கல்லை அடுத்த சீலப்பாடியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர், வழக் கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் குமாரின் மனைவி சோபனாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து சோபனா பதறியடித்து கொண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கணவரை பார்க்க சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமார் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து குமாரின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே குமாரின் தலையில் காயம் இருந்ததால் உடலை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் மீண்டும் கொண்டு வந்தனர். மேலும் குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று, குமாரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால், உடலை வாங்க மறுத்து குமாரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, புறநகர் துணை சூப்பிரண்டு கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குமாரின் உறவினர்கள் மறியலை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story