லஞ்சம் வாங்கி கைதான துணைவேந்தர் கணபதிக்கு சிறையில் முதல்வகுப்பு, கோர்ட்டு உத்தரவு
லஞ்சம் வாங்கி கைதான துணைவேந்தர் கணபதிக்கு கோவை சிறையில் முதல் வகுப்பு வழங்க லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைதானார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். துணைவேந்தர் கணபதியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறையில் முதல் வகுப்பு கேட்டு கணபதி, தர்மராஜ் ஆகியோர் சார்பில், லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் மூத்த வக்கீல் ஞானபாரதி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வக்கீல் ஞானபாரதி:- துணைவேந்தர் கணபதி வருமானவரி செலுத்தி வருகிறார். சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார். மேலும் முனைவர் பட்டம் பெற்ற 30 பேருக்கு இவர் வழிகாட்டுனராக இருந்து உதவி செய்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பல்வேறு இடங்களில் உதவி பேராசிரியர்களாக பதவி வகித்து வருகிறார்கள். கணபதி 78 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கல்வித்துறைக்கு இது உதவிகரமாக அமைந்துள்ளது. எனவே அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும்.
அரசு தரப்பு வக்கீல் சிவக்குமார்:- சிறையில் என்ன வசதி குறைவு உள்ளது என்று இந்த மனுவில் குறிப்பிடவில்லை. என்னென்ன தேவை என்றும் குறிப்பிடவில்லை. ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கக்கூடாது.
இவ்வாறு வக்கீல்கள் வாதிட்டனர்.
இந்த மனு மீதான உத்தரவு மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஜான்மினோ கூறிவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் இந்த மனு மாலையில் விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தருக்கு சிறையில் முதல் வகுப்பு அறையை வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டார். மேலும் உத்தரவு நகலை கோவை சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
கணபதிக்கு முதல் வகுப்பு வழங்க உத்தரவிட்டு இருப்பதால், சிறையில் அவருக்கு தனி அறையில் மின்விசிறி, ஒரு மேஜை, நாற்காலி, கட்டில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அறையில் டி.வி. இருப்பதுடன், தினசரி பத்திரிகையும் வழங்கப்படும். தரமான உணவு மற்றும் டீ, காபியும் வழங்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story