தற்கொலைகளை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் அசோக் சவான் கிண்டல்


தற்கொலைகளை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் அசோக் சவான் கிண்டல்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலைகளை தடுக்க மாநிலம் முழுவதும் மந்திராலயாவில் அமைத்தது போன்ற வலைகளை அமைக்கவேண்டும் என்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் சொல்கிறார்.

மும்பை,

தற்கொலைகளை தடுக்க மாநிலம் முழுவதும் மந்திராலயாவில் அமைத்தது போன்ற வலைகளை அமைக்கவேண்டும் என்று மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் சொல்கிறார்.

மந்திராலயாவில் வலை

மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் மராட்டியத்தின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த 8-ந் தேதியன்று இந்த கட்டிடத்தில் 5-வது மாடியில் இருந்து ஹர்ஷல் ராவ்தே என்ற ஆயுள் தண்டனை கைதி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மந்திராலயா கட்டிடத்தில் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மரத்வாடா மண்டலத்தில் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அசோக் சவான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிவாரணம் வழங்கவேண்டும்


அப்போது மந்திராலயாவில் வலை அமைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ பட்டம் பெற்றுவிட்டு வேலையில்லாமல் தவிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவேண்டும். விளைபொருட்களுக்கு தகுதியான விலையை வழங்கவேண்டும். இல்லையென்றால் தற்போதுள்ள நிலையில் தற்கொலைகளை தடுக்க மந்திராலயா மட்டுமல்ல மாநிலம் முழுவதும் பாதுகாப்பு வலைகளை அமைக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்” என்று கிண்டலாக பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஆலங்கட்டி மழைக்கு 7 முதல் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முன்வந்ததாக தெரியவில்லை. அரசு வேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்றார்.

Next Story