நர்சு தற்கொலை: டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி 3-வது நாளாக தொடர்ந்த போராட்டம்
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெண் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
காங்கேயம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா நரிமேடு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் மணிமாலா (வயது 25). திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி மணிமாலா தான் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் விரைந்து சென்று மணிமாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காங்கேயம் வந்த மணிமாலாவின் பெற்றோர், மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய 2 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி முன்பு மணிமாலாவின் பெற்றோர், உறவினர்கள், தமிழ்நாடு நர்சுகள் சங்கத்தினர், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், தர்ணா, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது மணிமாலாவை தற்கொலைக்கு தூண்டிய 2 டாக்டர் கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தால்தான், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மணிமாலாவின் உடலை வாங்குவோம், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நீதி கேட்டு கோஷம் போட்டவாறு போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 11-ந்தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நர்சுகள் மற்றும் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். இந்த போராட்டம் நீதிகேட்டு நடத்தப்படுகிற போராட்டமாக மாறியது. அப்போது சம்பந்தபட்ட டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் டாக்டர்கள் மீது போலீசார், நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி தற்கொலை செய்து கொண்ட நர்சு மணிமாலாவின் உடல் அன்று இரவு 8.30 மணி முதல் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நர்சின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு 3 நாட்கள் ஆகி விட்டதால், அவருடைய உடலில் உள்ள தோல் உரிய தொடங்கி விட்டது. எனவே ஆழ் உறை பனி வசதி உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நர்சு மணிமாலா உடலை மாற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய துண்டு நோட்டீசும் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story