விருதுநகர் அருகே அரசு பள்ளியில் பெற்றோர் முற்றுகை
விருதுநகர் அருகே அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பாலசுந்தர் என்பவர் உடற்கல்வி ஆசிரியராகவும், சோலைசாமி என்பவர் துப்புரவு பணியாளராகவும் பணியாற்றினர். இவர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் மாணவர்களை தூண்டி விடுவதாக புகார் எழுந்ததன் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் இவர்கள் இருவரையும் நேற்று பணி இடமாறுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் துப்புரவு பணியாளருக்கு ஆதரவாக மேலும் 2 ஆசிரியர்கள் செயல்படுவதால் பள்ளியில் பொது அமைதி கெடுவதாக புகார் கூறி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மகேந்திரன் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்ட பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களது கோரிக்கை குறித்து முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தால் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன் பேரில் முற்றுகையிட்ட பெற்றோர் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story