ராஜபாளையம் அருகே பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு
ராஜபாளையம் அருகே சிதைந்த நிலையில் பழமையான கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது:-
ராஜபாளையம் அருகே சேத்தூர் மணல் விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் சண்முகவேல் என்பவருக்குச் சொந்தமான மாட்டுத் தொழுவத்தை சீரமைத்த போது மண்ணின் மேல் மட்டத்தில் ஒரு கல் சிற்பத்தின் தலைப்பகுதி தென்பட்டதையடுத்து மிகவும் கவனமாக அங்குள்ள மக்களால் வெளியே எடுக்கப்பட்டது. இக்கல் சிற்பம் மிகவும் சிதைந்த நிலையில் வயிற்றுப்பகுதி வரை காணப்படுகிறது.
அடியார் ஒருவர் அமர்ந்த நிலையில் இடது கையை மடக்கி வைத்துள்ளவாறும் வலது கையை ஓங்கிய நிலையில் உடைந்து காணப்படுகிறது. வயிற்றுப்பகுதியின் வலது புறத்தில் மழு போன்ற ஒரு பொருளை தாங்கியிருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. சிற்பத்தில் தலைப்பாகை எதுவும் காட்டப்படாமல் மிக நீண்ட காதணிகள் தொங்குவது போன்று செதுக்கப்பட்டுள்ளது.
அதே போல கழுத்துப் பகுதிகளில் ருத்ராட்சை மாலை அணிந்துள்ளது போன்றும் மூன்று சுற்றுகளுடன் டாலர் ஒன்று தொங்கிய நிலையில் இருப்பது போன்றும் உள்ளது. மேலாடை எதுவும் இல்லாமல் வயிற்றுப்பகுதி வரை காட்டப்பட்டு கீழ் பகுதி உடைந்துள்ளது. எனவே இச்சிற்பம் ஒரு சைவரடியாராக இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சேத்தூரில் தேவியாறு, நகரியாறு, கோரையாறு போன்ற பல ஆறுகள் பாய்வதால் வளமிகுந்த இப்பகுதி சேற்றூர் என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு பின்னர் மருவி சேத்தூர் என வழங்கலாயிற்று. இங்குள்ள சீனிவாசப் பெருமாள் கோவில் மற்றும் திருக்கண்ணீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டில் சேத்தூரை ‘செம்மரமான குலசேகரபுரம்‘ என்று அழைக்கப்பட்டுள்ளது. கண்ணுடைய ஈஸ்வர நாயனார் என்றழைக்கப்படும் திருக்கண்ணீஸ்வரர் கோவில் கல்வெட்டொன்றில் அழகன் சிங்கனான சிங்களராயன் என்பவர் சைவமடம் ஒன்றை ஏற்படுத்தி இங்கு வரும் தபசிகளுக்கு உணவளிக்க வேண்டி கால் வேலி நிலம் தானமாக வழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது.
அந்தநிலத்திற்கு மாறவர்ம விக்கிரம பாண்டியன் வரி நீக்கம் செய்துள்ளமையும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. எனவே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பமும் அக்காலத்தில் வாழ்ந்த சைவரடியாராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. அதோடு இப்பகுதியில் ஏராளமான பட்டைக்கற்கள் காணப்படுவதால் மடங்கள் அழிந்த செய்தியை உணர்த்துகிறது. ஏற்கனவே இப்பகுதியில் ஏராளமான கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கந்தசாமி கூறினார்.

Related Tags :
Next Story