சிறுவனை கடத்திய வழக்கில் தாய், 2 மகள்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தானே கோர்ட்டு தீர்ப்பு


சிறுவனை கடத்திய வழக்கில் தாய், 2 மகள்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Feb 2018 3:30 AM IST (Updated: 14 Feb 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனை கடத்திய வழக்கில் தாய், 2 மகள்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

தானே,

சிறுவனை கடத்திய வழக்கில் தாய், 2 மகள்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தானே செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறுவன் கடத்தல்

தானே போரிவிலி பகுதியில் உள்ள பார் ஒன்றில் கடந்த 2014-ம் ஆண்டு ஊழியராக வேலை செய்து வந்தவர்கள் பிங்கி துல்சி(வயது 30) மற்றும் கிரண் ராதே(வயது 23). அக்காள், தங்கையான இவர்களுக்கு அதே பாரில் பாடகியாக வேலை செய்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு 5 வயதில் மகன் இருந்தான்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிங்கி துல்சி, கிரண் ராதே இருவரும் தங்கள் தாய் ராதே குப்தாவுடன்(49) மிரா ரோட்டில் உள்ள பாடகியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த பாடகியின் மகனை சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி அழைத்து சென்றனர். ஆனால் அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. சிறுவனுடன் மாயமானார்கள்.

இந்த நிலையில் சிறுவனின் தாய்க்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து மகனை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.26 லட்சம் தரவேண்டும் என மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

5 ஆண்டு கடுங்காவல்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராதே குப்தாவும் அவரது மகள்களும் சேர்ந்து சிறுவனை மேற்கு வங்க மாநிலத்திற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனை அவர்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர்.

மேலும் ராதே குப்தாவையும் அவரது மகள்களையும் கைது செய்து தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர். இதில் அவர்கள் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணம் ஆனது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி தாய், 2 மகள்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Next Story