அமெரிக்க தூதர் மாமல்லபுரம் வருகை


அமெரிக்க தூதர் மாமல்லபுரம் வருகை
x
தினத்தந்தி 14 Feb 2018 3:31 AM IST (Updated: 14 Feb 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க தூதர் மாமல்லபுரம் வருகை, புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் விமானம் மூலம் சென்னை வந்தார்.

மாமல்லபுரம்,

புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று மாலை மாமல்லபுரம் வந்தார். யுனெஸ்கோ புராதன சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு சென்ற அவர் அங்குள்ள பல்லவர் கால சிற்பங்களை கலை நயத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்தார். அவருக்கு தொல்லியல் துறை அலுவலர் காயத்ரி பல்லவர் கால புராதன சிற்பங்களை பற்றியும், அதன் வரலாறு குறித்தும் விளக்கி கூறினார். சிற்பங்களை வியந்து பார்த்த அமெரிக்க தூதர் கென்னத் ஐ.ஜஸ்டர் தன்னுடைய செல்போனில் கடற்கரை கோவில் சிற்பங்களை படம் பிடித்து மகிழ்ந்தார். பின்னர் அர்ச்சுனன் தபசு பகதிக்கு வந்த அவர் அங்குள்ள குடைவரை சிற்பங்களையும், மண்டபங்களையும் பார்த்து ரசித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்க தூதர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக குண்டு துளைக்காத காரில் பயணம் மேற்கொண்டார்.

Next Story