2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்காவிட்டால் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தோல்வி மூத்த மந்திரி அதிரடி கருத்து

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்காவிட்டால் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தோல்வி மூத்த மந்திரி அதிரடி கருத்து
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடாவிட்டால் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தோல்வி ஏற்படும் என்று மந்திரி ஒருவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடாவிட்டால் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தோல்வி ஏற்படும் என்று மந்திரி ஒருவர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

பனிப்போர்

மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. தற்போது கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தாலும் பா.ஜனதாவை சிவசேனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இனி வரும் அனைத்து தேர்தல்களையும் தனது கட்சி தனித்தே சந்திக்கும் என அறிவித்தார். இது பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வரும் சட்டசபை தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து பா.ஜனதா மூத்த மந்திரி ஒருவர் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது:-

தோல்வி ஏற்படும்

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் பா.ஜனதாவும், சிவசேனாவும் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். இரண்டு கட்சிகளும் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளது.

ஆயினும் இரு கட்சி களும் இணைந்து செயல்படுமாயின் கிட்டத்தட்ட 190 தொகுதிகளை (மொத்த தொகுதி 288) கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story