நட்சத்திர ஓட்டலில் ரூ.7 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல் விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது
மும்பை விமான நிலையத்தின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூ.7 கோடி கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
மும்பை விமான நிலையத்தின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூ.7 கோடி கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான போக்குவரத்து நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் பறிமுதல்
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று கென்யாவில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில், கென்யா விமான போக்குவரத்து நிறுவன ஊழியர் அப்டாலா அலிசேட்(வயது29) என்பவர் பணியில் இருந்தார்.
இந்தநிலையில், அப்டாலா அலிசேட் விமானத்தில் இருந்து இறங்கி அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அப்போது, அங்கு வெளிநாட்டை சேர்ந்த இன்னொருவர் வந்து அவரை சந்தித்து பேசினார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனே ஓட்டலுக்கு வந்து அப்டாலா அலிசேட்டின் உடைமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது, அவரது இடுப்பு பெல்ட், முழங்கால் உறை ஆகியவற்றுக்குள் அதிகளவில் தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
மொத்தம் 156 தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அப்டாலா அலிசேட் தங்கக்கட்டிகளை விமானத்தில் கடத்தி கொண்டு வந்ததும், விமான போக்குவரத்து நிறுவன ஊழியர் என்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சரியாக சோதனையிடாமல் வெளியே அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் அவரை சந்தித்து பேசிய நபர் கென்ய நாட்டை சேர்ந்த இப்ராகிம் அலி(26) என்பதும், அப்டாலா அலிசேட் விமானத்தில் கடத்தி வந்த தங்கக்கட்டிகளை வாங்க வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். விசாரணைக்காக இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story