பர்கூர் மலைப்பாதையில் பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்; 80 பயணிகள் உயிர் தப்பினர்
பர்கூர் மலைப்பாதையில் அரசு பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள் சென்று வருகின்றன. இதேபோல் அங்கிருந்து தமிழகத்துக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கர்காகண்டியில் இருந்து அந்தியூருக்கு தமிழக அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சை அந்தியூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த துரைசாமி (வயது 43) ஓட்டினார். அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (50) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பர்கூர் மலைப்பாதையில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் அருகே உள்ள ஒரு வளைவில் பஸ் மாலை 4 மணி அளவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது நாமக்கல்லில் இருந்து மைசூருக்கு சென்றுகொண்டு இருந்த லாரியும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் ‘அய்யோ, அம்மா’ என்று சத்தம் போட்டு கத்தினார்கள். நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். விபத்து ஏற்பட்டதும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தால் பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து அந்தியூரில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய பஸ் மற்றும் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் பஸ் மற்றும் லாரி மீட்கப்பட்டதை தொடர்ந்து பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது. 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பர்கூர் மலைப்பாதை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் தங்களுடைய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story