நவீன வடிவில் ‘தனி நபர் மருத்துவம்’
பிறப்பினால் உலக மக்கள் அனைவரும் ஒன்றே. மக்கள் தாம் செய்யும் தொழில்களால் வேறுபட்டிருந்தாலும், அதனால் அவர்களுக்குத் தனித்த சிறப்புகள் ஏதுமில்லை என்கிறார் திருவள்ளுவர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ எனும் குறள் மூலமாக திருக்குறள் நூலில் இதனை பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவர் வலியுறுத்துவது போல ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களைக் காட்டி ஒருவருக்கு ஒருவர் வேற்றுமை பாராட்டி சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருப்பது உலக மக்களுக்கு நல்லதுதான்.
ஆனால், மருத்துவம் என்று வரும்போது ஒவ்வொரு மனிதனும் பிறரிடமிருந்து பல வகைகளில் வேறுபட்டே இருக் கிறான் என்கிறது உயிரியல்.
அதாவது, மரபியல் அடிப்படை தொடங்கி, நோய்வாய்ப்படுதல் அல்லது நோயிலிருந்து மீண்டு வரும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்களின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதே அறிவியல் உண்மை.
இதன் காரணமாக, மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கான மருந்து அல்லது மருத்துவம் என்று வரும்போது அது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
உதாரணமாக, ஒருவருடைய வயிற்றுவலி அல்லது தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அல்லது உடல் உபாதைகளைக் குணப்படுத்தத் தேவைப்படும் மருந்துகளின் அளவானது அவரவர் ‘மரபியல் அமைப்பு’ மற்றும் ‘நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு’ உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்.
ஆனால், தற்போது வரை மனிதர்களின் உபாதைகளுக்கான மருந்துகள் ஒரு சராசரி அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக, மருந்துக்கடையில் கிடைக்கும் தலைவலிக்கான மருந்தின் குறைந்தபட்ச அளவு 25 மில்லி கிராம் (மி.கி) என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சிலருக்கு வெறும் 5 மி.கி. இருந்தாலே தலைவலி குணமாகும். வேறு சிலருக்கோ 10 அல்லது 15 மி.கி. தேவைப்படும். சிலருக்கு மட்டும்தான் 25 மி.கி. தேவைப்படும்.
ஆக, ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மக்கள் 10 முதல் 20 மி.கி. தலைவலி மருந்தை தேவையில்லாமலேயே உட்கொள்கிறார்கள். இதனால் எந்த வகையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை.
இந்த நடைமுறைச் சிக்கலுக்கு ஒரு தீர்வைக்காண, தனிநபர் ஒருவருடைய உயிரியல் அமைப்பின் அடிப்படையில் அவரவருக்கான மருந்துகளை பிரத்யேகமாக தயாரிக்க மற்றும் விநியோகம் செய்யும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறிய மருத்துவ ஆய்வாளர்கள் பல வருடங்களாக முயன்று வருகிறார்கள்.
அத்தகைய ஒரு சமீபத்திய ஆய்வில், உட்கொள்ளக் கூடிய கியூ.ஆர் கோட் (edible QR codes) வடிவில் தனி நபருக்கான பிரத்யேக அளவுகளில் மருந்துகளை தயாரித்து, சுலபமாக விநியோகமும் செய்ய முடியும் என்று கண்டறிந்து அசத்தியுள்ளனர். டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹேகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த கண்டு பிடிப்பு ஒவ்வொரு மனுதனுக்கும் தேவையான மருந்துகளை ஒரு கியூ.ஆர் கோட் வடிவில் கொடுக்க உதவும்.
அதன்மூலமாக, நோயாளிகள் அந்த கோடை ஸ்கேன் செய்து, ‘அது என்ன மருந்து, எந்த நோய்க்கான மருந்து, அதன் அளவு என்ன, அதனை எப்பொழுது மற்றும் ஒரு நாளில் எத்தனை முறை உட்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஒரு மருந்து தொடர்பான அத்தனைத் தகவல் களையும், தங்களுடைய சாதாரண செல்போனில் உள்ள ஒரு கியூ.ஆர் கோட் ஸ்கேனர் ஆப் மூலமாக யாருடைய உதவியும் இல்லாமலேயே உடனடியாக அறிந்துகொண்டு, உட்கொள்ளவும் முடியும்’ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆக, ஒரு கியூ.ஆர் கோட்தான் ‘மருந்து, அதன் பெயர் மற்றும் ரசாயனத் தகவல்கள்’ என அனைத்துமே என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதன்மூலமாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது நோயாளிக்கும் தேவையான குறிப்பிட்ட அளவு மருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்வதும் சாத்தியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் துணைப் பேராசிரியர் நதாலியா ஜெனினா.
தற்போது தொடக்க நிலையில் உள்ள இந்த ‘கியூ.ஆர் கோட் மருந்து’ தொழில்நுட்பமானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுது, ஒரு நோயாளி தேவைக்கு அதிகமான அல்லது குறைவான மருந்து உட்கொள்வது தவிர்க்கப்படுவதோடு, தவறான மருந்து அல்லது காலாவதியான ஒரு மருந்தை அறியாமல் உட்கொள்வது உள்ளிட்ட ஆபத்தான அசம்பாவிதங்கள் முற்றிலும் தடுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
Next Story