கடையம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி
கடையம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடையம்,
கடையம் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல்கள் வெளியானது.
போலி நியமன ஆணை
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயக்குமாரின் மனைவி முத்தரசி. இவர் கடந்த 23-ந் தேதி கடையம் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியை சந்தித்து, தனக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ஆணை வந்துள்ளது எனக்கூறி அதன் நகலை காண்பித்தார்.
அந்த பணி நியமன ஆணையில், மாவட்ட கலெக்டர் என்ற இடத்தில் கையெழுத்து இருந்தது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது முத்தரசி கொண்டு வந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது.
பல லட்சம் ரூபாய் மோசடி
இதுகுறித்து சாந்தி நேற்று முன்தினம் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கடையம் போலீசார் முத்தரசியை பிடித்து விசாரனை நடத்தினர். விசாரணையில், ‘புளியங்குடி அருகே உள்ள புன்னைவனம் சர்ச் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (வயது 37) இந்த போலி ஆணையை அவருக்கு வழங்கியதாக தெரிவித்தார். நேற்று பிரான்சிஸ் சேவியரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் அளித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்த நான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையம் வந்தேன். பின்னர் இங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கிறேன். சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆட்கள் தேர்வு செய்வதை அறிந்தேன். இதை பயன்படுத்தி பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ய திட்டமிட்டேன். கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறியதை பலரும் நம்பினர். இதை பயன்படுத்தி கொண்டு சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு முத்தரசியிடம் ரூ.3 லட்சம், மயிலப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுரேசிடம் ரூ.2½ லட்சம், நெல்லையப்பபுரத்தில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் என பலரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளேன். இவர்களுக்கு கலெக்டர் போன்று போலி கையெழுத்து போட்ட பணி நியமன ஆணைகளை தயாரித்து கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒருவர் கைது
இதையடுத்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் சேவியரை கைது செய்தனர். அவரிடம், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன் விசாரணை நடத்தினார். அவர் யார், யாரையெல்லாம் ஏமாற்றி உள்ளார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story