ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரிசெட் உரிமையாளர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண்


ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரிசெட் உரிமையாளர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 15 Feb 2018 2:45 AM IST (Updated: 15 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரிசெட் உரிமையாளர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

ஸ்ரீவைகுண்டம்,

ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரிசெட் உரிமையாளர் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள்

சென்னை மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள லாரிசெட்டில் கடந்த 6-ந்தேதி இரவில் சென்னையில் உள்ள 150-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றுகூடி, பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவை ‘கேக்‘ வெட்டி கொண்டாடினர். அப்போது அங்கு சென்ற போலீசாரை கண்டதும் சில ரவுடிகள் தங்களது வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

75 ரவுடிகளை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற ரவுடிகளை தேடினர். ரவுடிகளின் தலைவனான பினு நேற்று முன்தினம் சென்னை அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

லாரிசெட் உரிமையாளர் சரண்

இதையடுத்து பினுவின் பிறந்தநாளை கொண்டாட இடம் கொடுத்த லாரிசெட் உரிமையாளரான சென்னை பழைய வண்ணாரபேட்டை கப்பல் போளூர் தெருவைச் சேர்ந்த வேல் என்ற வேல்முருகனை (வயது 45) பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அவரை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட லாரிசெட் உரிமையாளர் வேல்முருகன் நேற்று ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் வைத்து, வருகிற 23-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு முருகன் உத்தரவிட்டார். வேல்முருகன் மீது சென்னை மாங்காடு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story