நெல்லை அருகே பயங்கரம்: தண்ணீரில் அமுக்கி 2½ மாத குழந்தை கொடூரக்கொலை குடும்பத்தகராறில் தாய் வெறிச்செயல்
நெல்லை அருகே குடும்பத்தகராறில் 2½ மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கடையம்,

நடத்தையில் சந்தேகம்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ளது வெய்க்காலிபட்டி கிராமம். இங்குள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சாத்தாக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து கடந்த 7.12.2017 அன்று லட்சுமிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யா என்று பெயரிட்டனர். ஆனால், சாத்தாக்குட்டி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
தண்ணீர் டிரம்மில் குழந்தை பிணம்
இந்த நிலையில் நேற்று 2½ மாத குழந்தையான ஆர்யா வீட்டில் பின்புறம் உள்ள தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் டிரம்மில் பிணமாக மிதந்தான். இதை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து யாரோ மர்ம நபர்கள் தனது வீட்டிற்குள் புகுந்து குழந்தையை டிரம்மில் அமுக்கி கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.
இதுகுறித்து கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர்உசேன், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் கைது
தொடர்ந்து போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கும் போது லட்சுமி அங்கு இருந்து நைசாக வெளியேறி வெய்க்காலிபட்டி கிராம நிர்வாக அதிகாரி அருணாசலத்திடம் சரண் அடைந்தார். அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் லட்சுமியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லட்சுமியின் நடத்தையில் அவரது கணவர் சாத்தாக்குட்டி சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் சாத்தாக்குட்டி வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை.
தண்ணீரில் அமுக்கி கொலை
கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறு செய்வதால், லட்சுமி ஆத்திரம் அடைந்தார். அப்போது, வீட்டில் இருந்த குழந்தை ஆர்யாவை பின்புறம் உள்ள தண்ணீர் நிரப்பிய டிரம்மில் அமுக்கி கொடூரமாக கொலை செய்ததும், பின்னர் ஒன்றும் தெரியாதது போல் நாடகம் ஆடியதும் தெரியவந்தது. எனினும் நடத்தை சந்தேகம் காரணமாகத்தான் குழந்தையை லட்சுமி கொன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இந்த வெறிச்செயலில் அவர் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாமா? என்ற கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நெல்லை அருகே 2½ மாத குழந்தையை தாயே தண்ணீரில் அமுக்கி கொடூரமாக கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story