நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் பேசினார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் நகராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.விழாவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சரோஜினிதேவி முன்னிலை வகித்தார்.
விழாவில் மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நுகர்வோர் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போதுதான் பொதுமக்கள் தரமான பொருட்களை வாங்குவதுடன் மட்டுமல்லாமல் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ந் தேதி தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது.பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மீது ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது ரூ.20 லட்சம் வரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூ.1 கோடி வரை மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும் ரூ.1 கோடிக்கு மேல் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யலாம்.
உணவகத்தில் கெட்டுப்போன உணவுப்பொருட்களை வழங்கியிருந்தாலும், மின்சார சேவையில் குறையிருந்தாலும், நுகர்வோர் குறைதீர்மன்றத்தை நாடலாம். இதற்கு நீதிமன்றத்துக்கு சென்றால் தீர்வு கிடைக்க நீண்ட காலம் ஆகும். ஆனால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பாதித்த நுகர்வோர்கள் நேரடியாகவோ, வக்கீல், முகவரை வைத்தும் முறையிடலாம். எந்தவொரு வழக்காக இருந்தாலும் 90 நாட்களில் முடிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
மேலும் கடைகளில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு ரசீது கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ரசீது பெறும்பட்சத்தில் சரியான முறையில் அரசுக்கு வரி சென்றடையும். தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதும், எடை குறைவாக பொருட்களை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு தரமற்ற பொருட்களை விற்பனை செய்வோர் மீது நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யும்போதுதான் தரமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படும். எனவே நுகர்வோர் உரிமைகளை அறிந்து, நுகர்வோர் சட்டத்திட்டங்களை சரிவர தெரிந்துகொண்டு சரியான முறையில் வழக்கு தொடர பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story