நாங்குநேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
நாங்குநேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
நாங்குநேரி,
நாங்குநேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகள் முற்றுகை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் வேலுமயில் தலைமை தாங்கினார்.
கொடுமுடியாறு அணைத்திட்ட பாசன விவசாய குளங்களான கேசவநேரி, ராஜபுதூர், சண்முகபுரம், தளவாய்புரம், நந்தகோபால சமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி உட்கோட்ட பொதுப்பணித்துறை என்ஜினீயர் மதனசுதாகர், கொடுமுடியாறு உதவி என்ஜினீயர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து தாசில்தாரிடம் தெரிவித்து நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் நாங்குநேரி தாலுகா செயலாளர் கணேசன், வக்கீல் முருகன், நந்தகோபாலசமுத்திரம் வேதமாணிக்கம், கேசவநேரி ராஜ் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story