மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்திய ஊழியரை கண்டித்து போராட்டம்
விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்திய ஊழியர் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளராக இருந்த சோலைமலை ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனை உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரன் கண்டித்ததால் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது.
இதனை அடுத்து இருவருக்கும் பணியிடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலித் விடுதலை இயக்க மாநில மாணவர்அணி செயலாளர் பீமாராவ் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் துப்புரவு பணியாளர் சோலைமலை மீதும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 3 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரனின் பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பீமாராவ் தலைமையில் இனாம்ரெட்டியபட்டி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் துப்புரவு பணியாளர் சோலைமலை மீதும் அவருக்கு ஆதரவாக செயல்படும் 3 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடற்கல்வி ஆசிரியர் பாலச்சந்திரனின் இடமாறுதல் உத்தரவினை ரத்து செய்யக் கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகரில் இருந்து இனாம்ரெட்டியபட்டிக்கு சென்ற அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை சிறைபிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட பஸ் விடுவிக்கப்பட்டது.
போராட்டம் நடத்தியவர் களுடன் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி அது உறுதி செய்யப்பட்டால் சோலைமலை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் 3 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும், உடற்கல்வி ஆசிரியர் பணியிட மாறுதலை ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரியிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Tags :
Next Story