மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.66 லட்சம் கடனுதவி
பி.செட்டி அள்ளியில் கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.66 லட்சம் கடனுதவியை கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பி.செட்டிஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரேணுகா தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் 2017-18-ம் ஆண்டில் கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.7000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கிட ரூ.124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வரை 27,716 விவசாயிகளுக்கு ரூ.134.09 கோடி கடன் வழங்கி கூட்டுறவுத்துறை சாதனை படைத்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.8 கோடியே 50 லட்சம் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.9 கோடியே 39 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பி.செட்டிஅள்ளி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 132 பேருக்கு ரூ.66 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மற்றும் 2 மலைவாழ் மக்கள் பல்நோக்கு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதேபோல் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் உள்பட 20 கூட்டுறவு வங்கி கிளைகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.
வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்டுவரும் சாதிச்சான்றிதழ், வருமானசான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தில் செயல்பட்டுவரும் இ-சேவைமையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களைஅணுகி பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை பெற்று அதை முறையாக திரும்பி செலுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையின் மூலம் கிடைக்கின்ற பல்வேறு நன்மைகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திகொள்ளவேண்டும்.
இந்த விழாவில் பாலக்கோடு சர்க்கரைஆலை தலைவர் கே.வி.அரங்கநாதன், தாசில்தார் அருண்பிரசாத், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், பி.செட்டிஅள்ளி கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துராஜ், செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story