தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மழைநீர் வடிகால்
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி நகருக்குள் வெள்ளம் புகாதவாறு தடுப்பதற்காக மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தனியார் நிறுவனம் உரிய ஆய்வு மேற்கொண்டு 3 கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.937 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.
இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 6 பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ரூ.96.12 கோடியில் 6 பணிகளையும் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பணிகள் விரைவில் தொடக்கம்
இதனால் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு பகுதியில் உள்ள காலாங்கரை, கழுகுபாதை, கழுதைபாதை ஆகிய 3 ஓடைகளில் இருந்து வரும் மழை தண்ணீரை வடக்கு பக்கம் உள்ள பெரிய பள்ளம் ஓடையின் வழியாக கடலுக்கு கொண்டு செல்லும் பணி, மேற்கண்ட 3 ஓடைகளில் இருந்து வரும் தண்ணீரை சி.வ.குளத்தில் சேகரித்து வைக்கும் பணி, சி.வ.குளம் தூர்வாறுதல், ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதேபோன்று சி.வ.குளத்தில் இருந்து உபரிநீரை மீளவிட்டான் சாலையில் வடிகால் அமைத்து பக்கிள் ஓடைக்கு கொண்டு செல்லும் பணி, செங்குளம் ஓடை வழியாக வரும் வெள்ளநீரை உப்பாற்று ஓடைக்கு கொண்டு செல்லும் பணி, முள்ளக்காடு ஓடையை அகலப்படுத்தி கட்டும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணிகள் மூலம் மாநகரின் வெளிப்பகுதியில் இருந்து மாநகரின் உள்பகுதிக்கு வரும் மழைநீர் மாநகரில் தேங்காத வகையில் மழைநீர் வடிகால்கள் வழியாக நேரடியாக கடலுக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணிகளை விரைவில் தொடங்குவதற்கு மாநகராட்சி மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story