திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை


திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2018 3:15 AM IST (Updated: 15 Feb 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

திருப்புவனத்தை சுற்றி லாடனேந்தல், மடப்புரம், பூவந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவசரகால சிகிச்சை மற்றும் விபத்து கால சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் 4 டாக்டர்கள் காலமுறைப்படி பணியாற்றி வருகின்றனர்.

அவசர காலத்தில் கூடுதலாக பணியாற்ற போதிய டாக்டர்கள் இல்லாததால் இங்கு வரும் நோயாளிகள் சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே இந்த மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story