தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் காற்று மாசுபடுவதை கண்டறியும் அதிநவீன கருவி பொருத்த வேண்டும் ஜோயல் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் காற்று மாசுபடுவதை கண்டறியும் அதிநவீன கருவி பொருத்த வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
தொழிற்சாலைகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 8 தொழிற்சாலைகள் அபாயகரமான தொழிற்சாலைகள் என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கழிவுகளால் காற்று மாசுபட்டு வருகிறது. இந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆண்டுக்கு 360-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாக மருத்துவத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நச்சுத்தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
அதிநவீன கருவி
தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை பொதுமக்கள் அறியும் வகையில், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வாழ்ந்துவரும் பிரதான குடியிருப்பு பகுதிகளில், காற்று மாசுபடுவதை கண்டறியும் அதிநவீன கருவி அமைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு அப்போதைய கலெக்டர் ரவிகுமார், முதல்கட்டமாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் காற்று மாசுபடுவதை கண்டறிவதற்கான அதிநவீன கருவி அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை அந்த கருவியை அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்வரவில்லை.
இந்த நச்சுத்தொழிற்சாலைகளால் தூத்துக்குடியில் பொதுமக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தினமும் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறார். பொதுமக்களின் உயிரை பாதுகாத்திட ஏதுவாக காற்று மாசுபடுவதை கண்டறியும் அதிநவீன கருவியை அமைக்காமல் ஏமாற்றி வருவது அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் காற்று மாசுபடுவதை கண்டறியும் கருவியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story