தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு பேச்சு
தமிழகத்தில், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கூறினார்.
திருவாரூர்.
திருவாரூரில் கீழவீதியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோபால், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பஜ்லுல்ஹக், இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட பொறுப்பாளர் தமீமுன்அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தோழமை கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்டு இயக்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியவர் தலைவர் கருணாநிதி. எந்த நிலையிலும் தோழமை இயக்கங்களுடன் நாங்கள் இருப்போம். நீங்கள் எங்களோடு என்றும் இருக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை ரத்து செய்தால் தான், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய முடியும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி கோட்டையை நோக்கி செல்ல வேண்டும்.
கோட்டையில் உள்ள ஆட்சியாளர்களை விரட்டி விட்டு தி.மு.க.வை ஆட்சி கட்டில் அமர வைக்க வேண்டும். தி.மு.க. தோழமை இயக்கங் களுடன் பலமாக இருக்கிறோம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிரதமர் மோடி அ.தி.மு.க. பக்கமும் இல்லை. தி.மு.க. பக்கமும் இல்லை. மோடிக்கு நிரந்தர நண்பர் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அவர் பிரதமராக இருக்க எதையும் செய்வார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு சீரழிந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு மாநில துணைச்செயலாளர் விடுதலைவேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் திருமார்பன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நஸ்ருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் வாரை பிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story