வில்லியனூரில் வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 6 பேர் கைது
வில்லியனூரில் பர பரப்பை ஏற்படுத்திய வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுவை வில்லியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தண்டபாணி மகனும் மாட்டுவண்டி தொழிலாளியுமான ஏழுமலை (வயது 21) நேற்று முன்தினம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த அவரது நண்பர்களான ஜெகதீஷ், ரத்தினம், ரவீந்திரன் ஆகியோரையும் அந்த கும்பல் கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலய்யன், ரமேஷ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் வில்லியனூர் பெரியபேட் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த ரவிவர்மன் என்ற ரவி (வயது 29), பெரியகாலாப்பட்டு சுகன் என்ற பிரதீப் (25), வில்லியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அய்யப்பன் (20), உத்திரவாகினிபேட்டை சேர்ந்த தனசரண் (20), பெரியபேட்டை சேர்ந்த சத்தியமுத்து என்ற பூச்சி (18) மற்றும் சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கடலூர் மாவட்டம் அழகியநத்தம் கிராமத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 3 கத்திகள், ரத்தக்கறை படிந்த உடைகள், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்ததாவது:-
கொலை செய்யப்பட்ட ஏழுமலையின் நண்பரான பாலகிருஷ்ணன் என்பவர் ரவிவர்மன் மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக பல்வேறு தொல்லைகள் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு தங்களது நண்பர்களான சுகன், அஜீத், அலன், குறளரசன் ஆகியோருடன் சேர்ந்து பாலகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனால் உஷாரான பாலகிருஷ்ணன் தனது நண்பரான ஏழுமலையுடன் சேர்ந்து ரவிவர்மனையும், சுகனையும் கொலை செய்ய திட்டம்போட்டு வந்துள்ளார். மேலும் தனசரணையும் ஏழுமலை மிரட்டியுள்ளார். இதனால் ஏழுமலையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அதற்குள் முந்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ரவிவர்மன், சுகன், அய்யப்பன், தனசரண், சத்தியமுத்து மற்றும் சிறுவன் ஒருவன் சேர்ந்து ஏழுமலையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டருகே நண்பர்களுடன் ஏழுமலை படுத்து இருந்த தகவலை சத்தியமூர்த்தியும், அந்த சிறுவனும் மற்றவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் ஏழுமலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் ஆயுதங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த மருதநாயகத்தை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ரவிவர்மன் மீது வில்லியனூர் காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், சுகன் மீது புதுவை மற்றும் தமிழகத்தில் பல கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளும், அய்யப்பன் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளன. குற்றவாளிகளை விரைவாக கைது செய்த போலீசாரை டி.ஐ.ஜி. ராஜீவ்ரஞ்சன் பாராட்டினார்.

Related Tags :
Next Story