நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளை 95 சிற்றூராட்சிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை
நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளை 95 சிற்றூராட்சிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திராவிடமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கூடலூர் தொகுதியில் உள்ள நெலாக்கோட்டை, சேரங்கோடு, முதுமலை, ஸ்ரீமதுரை ஊராட்சிகளை சிற்றூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டவயல் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். சேரங்கோடு, சேரம்பாடி டேன்டீ தேயிலை தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர், பந்தலூர் தாலுகா மக்களுக்கு பட்டா, மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
பாட்டவயல் பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். சேரங்கோடு, சேரம்பாடி டேன்டீ தொழிற்சாலைகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் நிதி கோரப் பட்டுள்ளது. எனவே தொழிற்சாலைகள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரிவு-17 நிலம் சம்பந்தமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது குறித்து அடுத்த வாரம் சென்னையில் தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்துடன் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரிய ஊராட்சியாக சேரங்கோடு உள்ளது. 35 ஊராட்சிகளை 95 சிற்றூராட்சிகளாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு சிற்றூராட்சிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சேரங்கோடு ஊராட்சியில் தற்போது ரூ.15 கோடியே 40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பயனாளிகளுக்கு ரூ.47 லட்சம் செலவிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். அவர், பொதுமக்களிடம் இருந்து சுமார் 200 மனுக்களை பெற்று துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை அலுவலர் ஜெயலட்சுமி, அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், கிரிஜா, வட்ட வழங்கல் அலுவலர் சித்தராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தனி தாசில்தார் சரவணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story