மும்பை- ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் அதிகாரிகள் தகவல்
மும்பை- ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என தேசிய அதிவிரைவு ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மும்பை,

புல்லட் ரெயில் திட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக புல்லட் ரெயில் திட்டம் நாட்டின் நிதி தலைநகரமான மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே செயல்படுத்தப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்புடன் புல்லட் ரெயில் திட்டம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் அபே ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.
புல்லட் ரெயில் திட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஜூன் மாதத்தில் பணி
இந்த நிலையில் அந்த பணிகளை மேற்கொள்ளும் தேசிய அதிவிரைவு ரெயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
‘புல்லட் ரெயில் திட்டப் பணிகளை தொடங்குவதற்கான அனைத்து துறை அனுமதிகளும் கிடைத்து விட்டன. புல்லட் ரெயில் வழித்தடம் அமையும் இடங்களில் புவி தொழில்நுட்ப ஆய்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதற்கான நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும். எனவே வருகிற ஜூன் மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விடும்.
மும்பையில் பாந்திரா- குர்லா முதல் பொய்சர் வரை 21 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரெயில் வழித்தடம் சுரங்க மார்க்கமாக அமைக்கப்படுகிறது.
இதில், 7 கி.மீ. தூர வழித்தடம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது.
75-வது சுதந்திர தினத்தன்று...
சாதாரணமாக ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வர 8 மணி நேரம் வரை ஆகும். ஆனால் புல்லட் ரெயில் மூலம் 3 மணி நேரத்தில் மும்பையை வந்தடையலாம். மேலும் 750 பயணிகள் வரை பயணிக்கலாம்.
இதற்காக இருமார்க்கத்திலும் 12 ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. புல்லட் ரெயில் திட்டப்பணிகளை முடிப்பதற்கான இலக்கு 2023-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அதாவது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று புல்லட் ரெயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story