ரெயில் நிலையத்தில் உருட்டு கட்டையால் தாக்கி முதியவர் கொலை முன்னாள் கடற்படை ஊழியர் கைது
ரெயில் நிலையத்தில் உருட்டு கட்டையால் தாக்கி முதியவரை கொலை செய்த முன்னாள் கடற்படை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,

சுமைதூக்கும் தொழிலாளி
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள கடவலி ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக கனு ஜாதவ் (வயது72), தனஞ்சய் குமார்(54) ஆகிய இரண்டு பேர் வேலை பார்த்து வந்தனர். தனஞ்சய் குமார் முன்னாள் கடற்படை ஊழியர் ஆவார்.
நேற்றுமுன்தினம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்வது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், கோபம் அடைந்த இருவரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.
அடித்து கொலை
இந்தநிலையில், கடும் ஆத்திரம் அடைந்த தனஞ்சய் குமார் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து கனு ஜாதவை சரமாரியாக தாக்கினார். இதில், அடி தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
தகவல் அறிந்து வந்த டிட்வாலா போலீசார் கனு ஜாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் சிலர் தனஞ்சய் குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story