குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க முழு ஒத்துழைப்பு தரவேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் தொடர்புடைய சட்டங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான திறன் வளர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடந்தது.
குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள், குழந்தைகளுக்கான உரிமைகள், அதை பெற்று தருவதற்கான பணிகளையும், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகின்றது. இதன்மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை உருவாக்கிட, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்தோ அல்லது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தோ அல்லது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்தோ தகவல் கிடைக்கப் பெறும்போது அவற்றை முழுமையாக விசாரித்து, பதிவுசெய்து உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, குழந்தைகளை பாதுகாப்பதோடு அக்குற்றம் செய்வோர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு முகாமின் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.
குழந்தை திருமணம் செய்துவைக்கும் பெற்றோர் அல்லது அதற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, அக்குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி மீண்டும் அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளும்போது இதுபோன்ற குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்படும்.
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றமாகும். அதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் மற்றும் கடும் தண்டனைகள் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப்பிரியா, தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மோகன், சென்னை சமூக பாதுகாப்பு துறையின் ஓய்வுபெற்ற குழந்தைகள் உளவியலாளர் ராமநாதன் உள்பட பலர் பேசினர்.

Related Tags :
Next Story