கார் மோதி பள்ளி மாணவன் பலி


கார் மோதி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 15 Feb 2018 5:15 AM IST (Updated: 15 Feb 2018 9:01 AM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலியானான். டிரைவர் கைது செய்யப்படடார்.

மல்லசமுத்திரம்,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே மோர்ப்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது13) 9-ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் அதே பகுதியை சேர்ந்த சிபிராஜ்(14) 9-ம் வகுப்பும், சந்தோஷ்குமார்(12) 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்து மூவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மல்லசமுத்திரம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் மாணவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத் திலேயே படுகாயத்துடன் உயிரிழந்தான்.

மேலும் சிபிராஜ், சந்தோஷ்குமார் ஆகியோர் படுகாயத்துடன் உயிர்தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கு காரணமான காரை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கினர். விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார் டிரைவர் மதுபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கார் டிரைவரான மோகன்ராஜை (24) இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கைது செய்தார்.


Next Story