காட்டில் விடப்பட்ட குட்டி யானை மீண்டும் ஊருக்குள் வந்தது
சத்தியமங்கலம் அருகே காட்டில் விடப்பட்ட குட்டி யானை மீண்டும் ஊருக்குள் வந்தது.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. இங்குள்ள கரளியம் கிராமத்தில் மக்காசோளம் அறுவடை செய்யப்பட்ட ஒரு விவசாய நிலத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குட்டியானை உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக்கிடந்தது. அந்த யானையின் அருகில தாய் யானை நின்று கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் வனத்துறையினருடன் அங்கு சென்றார். பின்னர் தாய் யானையை வனத்துறையினர் விரட்டிவிட்டனர். தொடர்ந்து 2 நாட்களாக குட்டி யானைக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அதனால் நேற்று முன்தினம் மாலை குட்டி யானை தானாக எழுந்து நின்றது. வனத்துறையினர் அந்த குட்டியானையை பின் தொடர்ந்து சென்று காட்டில் கொண்டு போய் விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த குட்டி யானை மீண்டும் கரளியம் கிராமத்துக்கு வந்தது. அங்குள்ள விவசாய நிலத்தின் அருகே உள்ள பள்ளத்தில் படுத்துக்கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் கால்நடை மருத்துவர் குழுவுடன் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டார்கள்.
அப்போது குட்டி யானை சோர்வாக படுத்து கிடந்தது தெரிய வந்தது. உடனே அந்த யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மெதுவாக தூக்கினார்கள். பின்னர் அந்த யானையை மெல்ல நடக்க வைத்தபடி வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றனர். சிறிது தூரம் சென்றதும் யானை சோர்வடைந்தது. நடக்க முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் குட்டியானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story