தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேக வரம்பு நிர்ணயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
வேக வரம்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டங்களின்படி மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–
தூத்துக்குடி– திருச்செந்தூர்– கன்னியாகுமரி சாலையில் டி.சி.டபிள்யு முன் 40 கிலோ மீட்டர் வேகம் எனவும், தூத்துக்குடி மாநகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகம் எனவும், பிற சாலைகளில் 35 கிலோ மீட்டர் வேகம் எனவும் வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வேக வரம்பு 40 கிலோ மீட்டர் எனவும், தூத்துக்குடி எப்.சி.ஐ. ரவுண்டானாவில் இருந்து புதுக்கோட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேக வரம்பு 60 கிலோ மீட்டர் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை 45பி குறுக்குச்சாலை பகுதியிலும் எட்டயபுரம் அருகில் விளாத்திகுளம் பிரிவு சாலை பகுதியிலும், கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும் வேக வரம்பு 60 கிலோ மீட்டர் எனவும், ஆழ்வார்திருநகரியில் செல்லும் மாநில நெடுஞ்சாலை 40–ல் ஊருக்குள் செல்லும் சாலையில் 30 கிலோ மீட்டர் வேகம் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாநில நெடுஞ்சாலை 40–ல் குரும்பூர் ஊர் எல்லைக்குள் செல்லும் பகுதிக்கு வேகவரம்பு 30 கிலோ மீட்டர் ஆகவும், அனைத்து நகர பஞ்சாயத்து மற்றும் தாலுகா தலைமையிடங்களில் செல்லும் சாலைகளில் 30 கிலோ மீட்டர் ஆகவும் வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்–பாளையங்கோட்டை சாலையில் குமாரபுரம் முதல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வரை 30 கிலோ மீட்டர் என வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் இருந்து முள்ளக்காடு வரை 40 கிலோ மீட்டர் வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story