வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல்
நாகையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகா, மாவட்ட இணை செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்படட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்ட ரீதியான குடும்ப ஓய்வூதியம் 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேரை கைது செய்து நாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story