தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்


தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 16 Feb 2018 4:00 AM IST (Updated: 16 Feb 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் எம்.செல்வராசு, வை.செல்வராஜ், சந்திரசேகரஆசாத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை அருள்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாநில மாநாடு

தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு இருவழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பழைய சாலை செப்பனிடாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பும் நடைபெறுகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அடுத்தமாதம்(மார்ச்) 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மன்னார்குடியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story