வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல்
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 221 பெண்கள் உள்பட 265 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஒய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானிய தொகையை உயர்த்த வேண்டும். பணிக்கொடையை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் மற்றும் சமையல், உதவியாளர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் புஷ்பநாதன், சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், சங்க மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 221 பெண்கள் உள்பட 265 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story